தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டு நாளில் நியூசிலாந்து செல்லும் இளம் வீரர் ப்ரித்வி ஷா!

டெல்லி: தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற உடல்தகுதியை நிரூபித்த பின், இளம் வீரர் ப்ரித்வி ஷா நியூசிலாந்து தொடருக்கு பயணம் செய்யவுள்ளார்.

fit-again-prithvi-shaw-set-to-join-india-a-team-in-new-zealand
fit-again-prithvi-shaw-set-to-join-india-a-team-in-new-zealand

By

Published : Jan 15, 2020, 9:19 PM IST

இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. தடை செய்யப்பட்ட மருந்தினை உபயோகப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாடுவதற்கு பிசிசிஐயால் அவருக்கு எட்டு மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்ததையடுத்து உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி போட்டியில் ப்ரித்வி ஷா கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராவிதமாக தோளில் காயம் ஏற்பட்டது.

இதனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தேர்வான இந்திய ஏ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக விஜய் சங்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டுள்ளார். அவர் தனது உடல் தகுதியை நிரூபித்ததையடுத்து, நியூசிலாந்துக்கு பயணம் செல்லவுள்ள இந்தியா ஏ அணியுடன் இரண்டு நாட்களில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடினால், இளம் வீரர் ப்ரித்வி ஷா நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் காலியாக உள்ள மூன்றாவது தொடக்க வீரருக்கான வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சதத்துடன் சாதனை - மும்பையில் அடிச்சு தூக்கிய வார்னர்!

ABOUT THE AUTHOR

...view details