தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை முதல் டெஸ்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! - இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சென்னை டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனத் தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

First Test match Between India and England will be played without Spectators
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

By

Published : Feb 2, 2021, 8:52 PM IST

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் நடைபறுகிறது.

இந்தச் சூழ்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அரசு அறிவிப்பின்படி 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், “டெஸ்ட் போட்டி கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!

ABOUT THE AUTHOR

...view details