தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்களின் முதல் செஷன் முக்கியமானது : சச்சின் டெண்டுல்கர்!

பகலிரவு டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் முதல் செஷன் மிகவும் முக்கியமானது என இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

first-session-of-day-night-test-to-be-critical-sachin-tendulkar
first-session-of-day-night-test-to-be-critical-sachin-tendulkar

By

Published : Feb 8, 2020, 12:22 PM IST

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆர்வமாக உள்ளன. இதுகுறித்து சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டிக்காக பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியளித்து சச்சின் டெண்டுல்கர், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சச்சின் பேசுகையில், '' பகலிரவு டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் முதல் செஷன் முகவும் முக்கியமானது. பிட்ச்சில் பனி சூழ்வதற்கு முன்னதாக கவனமாக ஆட வேண்டும். ஆட்டத்தை டிக்ளேர் செய்யும் போது சரியாக சிந்திக்கவேண்டும். அதேபோல் பிட்ச்சில் பனி சூழ்ந்த பின், வெளிச்சத்திற்கு கீழ் ஆடப்படும் 15 முதல் 20 ஓவர்களில் கடினமாக இருக்கும்'' என்றார்.

இந்திய அணி சில மாதங்களுக்கு முன்னதாக கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ், ஸ்டீவ் ஸ்மித், கோலி, லபுசானே... மனம் திறந்த சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details