ஐசிசியால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி, 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
தரவரிசை பட்டியலில் முதல் ஏழு இடங்களில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் தொடரை நடத்தும் இந்தியா என மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடருற்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள இரண்டு அணிகளைத் தேர்வு செய்வதற்காக, ஐசிசி இன்று (ஜூலை.27) உலகக்கோப்பை சூப்பர் லீக் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐசிசியின் முழு உறுப்பினராக இருக்கும் 12 அணிகளில் எட்டு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் மற்றும் 2015-17 சூப்பர் லீக் தொடரை வென்ற நெதர்லாந்து என, மொத்தம் ஐந்து அணிகளுக்கும் இடையே தகுதிச் சுற்றுப் போட்டி நடத்தப்பட்டு, அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.