இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஆடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முதல் போட்டியில் சிறப்பாக ஆடினோம். அதில் எங்களது ஃபீல்டிங் சொதப்பலாக இருந்தது. அது இரண்டாவது போட்டியில் நடக்காது என நினைக்கிறேன்.
இந்திய அணி நிச்சயம் எங்களுக்கு பதிலடிக் கொடுக்க காத்திருக்கும். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதானது இல்லை என்பது எனக்கு தெரியும். அதனை எதிர்கொள்ள எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன.
இரண்டாவது போட்டியில் ஜோஷ் ஹெசல்வுட் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பட் கம்மின்ஸ் அல்லது மிட்சல் ஸ்டார்க் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்படும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்கள் மீண்டும் கவுண்டி கிரிக்கெட்டுக்கு திரும்பும் அஸ்வின்!