இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும், இங்கிலாந்து ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இப்போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக, முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், டொமினிக் பெஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.