நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கானியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோக்கி ஃபர்குசனிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஃப்ளிட்சர் - மேயர்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.