இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பழமைவாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. லண்டன் பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேமரான் பேன்கிராஃப்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராடு ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டு வீரர்களும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் முடிந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் களமிறங்கினர்.
வார்னரை நோக்கி சாண்ட்பேப்பரை காண்பித்த ரசிகர்கள் இப்போட்டியில் டேவிட் வார்னர் இரண்டு ரன் எடுத்திருந்தபோது, பிராட் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவர் அவுட்டாகி வெளியேறியபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் டேவிட் வார்னரை நோக்கி சாண்ட்பேப்பரை காண்பித்தனர். ஏனெனில் வார்னர் அந்த சாண்ட் பேப்பரைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகத் தான் தடை செய்யப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வார்னர், ஸ்மித் ஆகியோர் ரசிகர்களால் மைதானத்தில் வைத்து கேலி செய்யப்பட்டனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பின் வார்னர், ஸ்மித் ஆகியோரை ரசிகர்கள் இதுபோன்று தர்மசங்கடமான சூழல்களுக்கு ஆழ்த்துவது வழக்கமான ஒன்றாக நடந்துவருகிறது. இன்று ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்து ரசிகர்கள் அந்த காரியத்தை செய்ததற்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.