தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2020, 9:50 PM IST

ETV Bharat / sports

நீண்ட நாள்களுக்கு பின் மைதானத்திற்கு வந்த ரசிகர்கள்; பழைய சூழலுக்கு மாறும் கிரிக்கெட்!

சர்ரே - மிடில்செக்ஸ் கவுண்டி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் சமூக இடைவெளியுடன் கண்டுகளித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

fans-in-english-sporting-event-for-the-first-time-since-march
fans-in-english-sporting-event-for-the-first-time-since-march

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒலிம்பிக், பிரஞ்சு ஓபன், டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் என விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே மைதானத்தில் ரசிகர்களின்றி போட்டியை நடத்த விளையாட்டு அமைப்புகள் அனுமதியளித்தது.

இதனைத் தொடர்ந்து கால்பந்து போட்டிகள் தொடங்கின. பின்னர் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் பார்வையாளர்களின்றி தொடங்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டாலும், ரசிகர்களின்றி கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது ரசிகர்களிடையே புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்களுடன் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளான சர்ரே - மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் நடத்தப்பட்ட போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போட்டிகள் ஆடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது பற்றி சர்ரே அணியின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் பேசுகையில், '' டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்தவுடன் எங்கள் கிளப்பிற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்தது. இந்தப் போட்டி ரசிகர்களுடன் தொடர்ந்து நடக்க வேண்டும் என விரும்புகிறேன். போட்டிக்கு முன்னதாக அரசு மற்றும் சுகாதாரத் துறையிடம் இருந்து பலரும் வந்து ஆலோசனை நடத்தி ஆய்வு செய்தனர்.

நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியால் எவ்வித விளைவுகளும் ஏற்படவில்லை என்றால் நிச்சயம் இது தொடரும். ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குதிரை பந்தயங்களைப் பார்க்கவும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:'இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி வெல்லும்' - பிராட் ஹாக் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details