தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

kohli
kohli

By

Published : Jan 5, 2020, 12:29 PM IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் உடைந்த பழைய மொபைல் போன்களையும் கம்பிகளையும் வைத்து கோலியின் உருவப்படத்தை செதுக்கியுள்ளார்.

தனது கைவண்ணத்தில் அவர் செதுக்கிய கோலியின் உருவப்படத்தின் காணொலியை (Portrait) பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த உருவப்படத்தின் மூலம், தன் மீது ராகுல் பாரெக் வைத்திருந்த இந்த அன்பைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த கோலி அந்த உருவப்படத்தில் தனது ஆட்டோகிராஃபை வழங்கினார்.

"பயனற்ற பழைய மொபைல் போன்களையும், கம்பிகளையும் வைத்து கோலியின் உருவப்படத்தை செதுக்க எனக்கு மூன்று நாள்கள் ஆனது" என ராகுல் பாரெக் தெரிவித்துள்ளார்.

31 வயதான கோலி கடந்த 10 ஆண்டுகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் பேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இதுமட்டுமின்றி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் 50-க்கும் மேல் பேட்டிங் ஆவரேஜ் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் கோலிதான்.

இதையும் படிங்க:கோலி இங்க வந்து விளையாடுங்க... பாக். ரசிகரின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details