இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
பாக். வீரர்களின் குடும்பங்களுக்கு அனுமதியில்லை: பிசிபி - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியினர் தங்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல அனுமதியில்லை என பிசிபி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 29 வீரர்களுடன் 14 பேர் கொண்ட பயிற்சியாளர் குழுவினரும் செல்லவுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் பாகிஸ்தான் குழுவினர் யாருக்கும் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், ''பாகிஸ்தான் வீரர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர் யாருக்கும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற விளக்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களின் குடும்பத்தினர் இங்கிலாந்து சென்று உடனிருந்தாலும் எவ்வித பிரயோஜனமும் இல்லை. அதனால் செப்டம்பர் மாதம் தொடர் முடிவடையும் வரையில் பாகிஸ்தான் வீரர்கள் அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதியில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.