சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜை, மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இனவெறி குறித்த விமர்சனங்கள் எழுவது இது புதிதல்ல என்று இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஸ்வின், “சிட்னியில் இதற்கு முன்னதாகவும் இனவெறிக்கு எதிரான பிரச்னையை சந்தித்துள்ளோம். அது 2011ஆம் ஆண்டு நான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது நடந்துள்ளது. அப்போட்டியின் போது, எனக்கு இனவெறி என்றால் என்னவென்று கூட அர்த்தம் தெரியாது. அதனால், எனக்கு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை” என்றார்.
ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டிலும் இன்வெறி குறித்த சர்ச்சைகள் எழுந்துவருவது ரசிகர்கள் மத்தியிலும், விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட்: 2ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் இந்தியா; வெற்றியைப் பெறுமா?