கரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதத்திற்குப் பின் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூலை 8ஆம் தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் 2019-2021ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாகும். மே, ஜூன் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய தொடர், கரோனா வைரஸ் காரணமாக ஜூலையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் ஈ-டிவி பாரத் செய்திகளுக்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், ''கரோனா சூழலில் பார்வையாளர்களின்றி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது சரியான முடிவுதான். ஏனென்றால் மைதானத்தில் சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்களையும் நிர்வகிக்க எளிதாக இருக்கும்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்கும் ஹோட்டல்களில் வேறு யாரும் தங்கவைக்கப்பட மாட்டார்கள். அதனால் அவர்களைக் கண்காணிப்பதும் எளிதாக இருக்கும். வீரர்களுக்கும் தொடர்ந்து கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியும்.