இந்திய அணியின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். மிஸ்ட்ரி பந்துகள் வீசுபவர் என சர்வதேச அரங்கில் சில பந்துவீச்சாளர்களைக் கூறுவார்கள். அந்த வரிசையில் இந்த இளம் வீரரின் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு சில போட்டிகளில் ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், குல்தீப் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள் ஒரே ஓவரில் ஆட்டத்தை தங்களது அணிகளின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிவிடுவர். அதற்கு ஏற்றார்போல் இந்திய வீரர் குல்தீப்பும் பல போட்டிகளை இந்தியா பக்கம் திருப்பி வெற்றியை தேடித் தந்துள்ளார்.
ஈ டிவி பாரத் செய்திகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவிடம் அவர் சிறுவயது முதல் விளையாடிய கான்பூர் மைதானத்தில் அமர்ந்து பேசுகையில், ''இந்த மைதானம் எப்போதும் ஸ்பெஷலானது. சிறுவயது முதல் இந்த மைதானத்தில்தான் கிரிக்கெட் விளையாடிவருகிறேன். எப்போதெல்லாம் இந்த மைதானம் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நிச்சயம் வருவேன் என்றவரிடம் சில கேள்விகள் முன்வைத்தோம்.
தோனி பற்றி...?
தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக பல விஷயங்களை செய்துள்ளார். அதனால் நிச்சயம் மிஸ் செய்கிறேன். கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் சிறந்த விக்கெட் கீப்பர்கள்தான். ஆனால் தோனி செயல்பாடுகள் யாரோடும் ஒப்பிட முடியாதது.