இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருந்தவர் விஜய் சங்கர். இவர் கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்று அசத்தினார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின்போது காயமடைந்தார். இதையடுத்து அவர் சில போட்டிகளில் பங்கேற்காமலும் இருந்தார்.
இந்நிலையில் காயத்திலிருந்து மீண்ட விஜய் சங்கர், தான் மீண்டும் இந்திய அணியில் அணியில் இடம்பெற்று, அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவேன் என்று ஈடிவி பாரத்துடனான பிரத்யேக நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.
விஜய் சங்கரின் நேர்காணல்;
இந்திய அணியிலிருந்து வெளியேறியது எனக்கு கடினமாக இருந்தது. எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் அது கடினமாக இருக்கும், ஏனென்றால் நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் எங்களுக்கு ஒரு கனவு. ஆனால் நான் மீண்டும் முயற்சித்த தருணத்தில் காயம் காரணமாக என்னால் சரியாக விளையாட முடியவில்லை.
கடந்த உள்நாட்டு சீசன்களின் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். மேலும் நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய ஏ அணிக்காகச் சிறப்பாகவும் ஆடினேன். என்னால் அணியின் எந்தவரிசையிலும் களமிறங்கி உதவ முடியும். ஆனால் நான் மீண்டும் எப்போது அணிக்குத் தேர்வுசெய்யப்படுவேன் என்பது கேள்விக்குறியானது. ஏனெனில் அது அனைத்தும் தேர்வுக்குழுவின் முடிவில்தான் உள்ளது. அதனால் நான் தொடர்ந்து என்னுடைய சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முயற்சித்துவருகிறேன்.
விஜய் சங்கருடனான பிரத்யேக நேர்காணல் உள்ளூர் போட்டிகளுக்காக நீங்கள் எவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறீர்கள்?
ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டேன். மீண்டும் எனது பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகவும் உள்ளேன். ஏனெனில் கிரிக்கெட் வீரர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி பெறாமல் இருப்பது வெறுப்பான ஒன்று. அதனால் நான் திரும்பவும் எனது பயிற்சிகளுக்குத் திரும்புவது மிகவும் முக்கியம்.
ஏனெனில் என்னைப் போன்ற ஒருவருக்கு உள்நாட்டுத் தொடர்கள் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் இனியும் இழக்கத் தயாராக இல்லை. அதனால் நான் தற்போது மீண்டுவருவது முக்கியமானது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் அணி மீதான தடையை நீக்கியது நியூசிலாந்து!