ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைந்தது. முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி அசத்தினர். இதனை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட நவ்தீப் சைனி ஈடிவி பார்த்துடனான பிரத்யேக உரையாடலில் கலந்து கொண்டு பேசினார். அவரது உரையாடல் இதோ....
கேள்வி: உங்களது காயத்தின் நிலை குறித்து கூறுங்கள்?
சைனி:எனது காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவுள்ளேன். அங்கு சென்ற பின்னர் தான் காயத்தின் தீவிரம் குறித்து கூறமுடியும்.
கேள்வி: விராட் கோலி ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் இருந்த சூழ்நிலை என்ன?
சைனி: நாங்கள் ஒரு அணியாக விளையாடுவதால், எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. நாங்கள் ஒரு போட்டிக்குச் செல்லும்போது, எங்களிடம் 11 வீரர்கள் உள்ளனர். அந்த போட்டிகளில் செயல்திறன் மிகவும் முக்கியமானது. எனவே விராட் கோலி விடுப்பு எடுத்தபோது, அவர் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். ஒவ்வொரு போட்டியிலும் 110 விழுக்காடு உழைப்பை கொடு, அது உனக்கு நிச்சயம் உதவி செய்யும். போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல் உனது ஆட்டத்தை வெளிப்படுத்து என அறிவுறுத்தினார்.
கேள்வி: மூத்த வீரர்கள் இல்லாமல் விளையாடியது எப்படி இருந்தது?
சைனி: போட்டிகளின் போது அணியின் மூத்த வீரர்கள் காயமடைவது இயல்பான ஒன்று தான். இதில் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். ஆனால் இத்தொடருக்கு முன்னதாகவே நாங்கள் அணியின் மூத்த பந்துவீச்சாளர்களிடம் ஆலோசனைகளை பெற்றோம். அவர்கள், போட்டிகளுக்கு எப்படி தயாராவது, சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது, போட்டியை கணிப்பது போன்ற பல அறிவுரைகளை எங்களுக்கு வழங்கினர். அதனால் இத்தொடரின் போது நாங்கள் மூத்த வீரர்களின் ஆலோசனை படியே ஆட்டத்தை விளையாடினோம்.
கேள்வி: இத்தொடரில் உங்களது மிக சிறந்த தருணம் எது?=