கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஒதுக்கிய நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வீட்டின் 2 கிமீ சுற்றளவிற்குள் நடந்து சென்று வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வாகனங்களில் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 20ஆம் தேதி சொகுசு காரில் திருவான்மியூர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு ஒரு நபர் வந்தார். இதனைக் கண்ட போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே காரை மடக்கி காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.