இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்தவர் கவுதம் கம்பீர். இவர்,2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தவர்.
"உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் அனுபவமே": லக்ஷ்மண் குறித்து மனம் திறக்கும் கம்பீர்! - தமிழ் விளையாட்டு செய்திகள்
இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு புது அனுபவத்தை கற்றுக்கொடுத்தது. மேலும் எங்களது டிரெஸ்ஸிங் ரூமில் அவர் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த விவிஎஸ் லக்ஷ்மண் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "விவிஎஸ் லக்ஷ்மணுடன் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு அனுபவத்தைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் எங்களது டிரெஸ்ஸிங் ரூமில் நீங்கள் ஒரு மிகப்பெரும் முன்மாதிரியாக திகழ்ந்தீர்கள். அதன் காரணமாகவே நீங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆசானாகவும் உள்ளீர்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை குறித்து வெளியிடும் பதிவுகளை நீங்கள் ஏன் கேலி செய்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.