கர்நாடகா அணிக்கு எதிரான பராடோ அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் ஏழாவது ஓவரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிசிசிஐ வர்ணனையாளர்கள் இருவர் இப்போட்டியை தொகுத்து வழங்கினர்.
அதில், சுனில் கவாஸ்கர் இந்தி மொழியில் தனது கிரிக்கெட் குறித்த அறிவுரைகளை வழங்கியது எனக்கு பிடித்திருந்ததது. இந்தியில் டாட் பால் என்பதை பிந்தி பால் என கூறுவதுவும் அழாகாக இருக்கிறது என ஒரு வர்ணனையாளர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு வர்ணனையாளர், "இந்தியர்கள் அனைவரும் இந்தியை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தி மொழிதான் நமது தாய் மொழி. இதை விட பெரிய மொழி இங்கு இல்லை. நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்தியில்தான் நாங்கள் பேச வேண்டுமா என கோபத்துடன் கேள்வி எழுப்புவதை பார்த்துள்ளேன். நீங்கள் இந்தியாவில் வசிப்பதால் நிச்சயமாக தாய்மொழியான இந்தியில்தான் பேச வேண்டும்" என பேசினார்.
சர்ச்சைக்குரிய வகையில் இந்த கருத்தை முன்வைத்த அந்த வர்ணனையாளர் சுனில் தோஷி என தகவல் வெளியாகியுள்ளது. பரோடாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், ஆறு முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது கவனத்துக்குரியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வைரலான சுனில் தோஷியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு என்று தேசிய மொழி கிடையாது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கென தனி மொழி இருக்கிறது என ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, #stopHindiImpositon என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்களான மனீஷ் பாண்டே, கே.எல். ராகுல் இருவரும் கன்னட மொழியில் பேசிகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மும்பை இந்தியன்ஸ் பிடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமா? சஞ்சய் மஞ்ரேக்கர் - ஜடேஜா குசும்புகள்