தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘தோனிக்கு பிடித்த வீரராக ரெய்னா இருந்தார்’ - யுவராஜ் சிங் பளீச்! - சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தவரை, அவருக்கு பிடித்த வீரராக சுரேஷ் ரெய்னா இருந்தார் என, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Every captain has a favourite, think Mahi really backed Raina: Yuvraj
Every captain has a favourite, think Mahi really backed Raina: Yuvraj

By

Published : Apr 19, 2020, 4:24 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றினால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊராடங்கு உத்தரவின் காரணமாக, இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், பிரபல விளையாட்டு பத்திரிக்கைக்கு அளித்த இணைய நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அப்போது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர் எழுந்த தேர்வு குழப்பம் குறித்து பேசிய யுவராஜ், தோனி கேப்டனாக இருந்த வரையிலும் அவருக்கு பிடித்த வீரராக சுரேஷ் ரெய்னா இருந்ததாக தெரிவித்தார்.

யுவராஜ் சிங் - ரெய்னா - தோனி

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “சுரேஷ் ரெய்னாவுக்கு பெரும் ஆதரவாக செயல்பட்டவர் தோனி. ஏனெனில் ஒவ்வொரு கேப்டன்களுக்கு பிடித்த வீரர் என ஒருவர் இருப்பார். அதுபோல் தோனிக்கு பிடித்த வீரராக எப்போதும் சுரேஷ் ரெய்னா இருந்துள்ளார்.

அத்தொடரில் யூசுப் பதானும், நானும் சிறப்பாகத்தான் செயல்பட்டு வந்தோம். ஆனால் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லை. மேலும் அச்சமயம் இந்திய அணியிடம் இடக்கை பந்துவீச்சாளர் யாரும் இல்லை. நானும் சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்தேன். அதனால் வேறுவழியின்றி யூசுப் பதானுக்குப் பதிலாக ரெய்னாவை அணியில் சேர்க்க தோனி ஆதரவளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

‘தோனிக்கு பிடித்த வீரராக ரெய்னா இருந்தார்’

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவரையிலும், அணியின் முக்கிய வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து ரெய்னா இந்திய அணிக்காக விளையாடிய போட்டிகள் அறிதாகவே மாறிவிட்டது. ஏனெனில் கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு சுரேஷ் ரெய்னாவின் உடற்தகுதியை காரணம் காட்டி தேர்வுக் குழுவினர் அவரை அணியிலிருந்து நீக்கினர்.

தோனி - ரெய்னா

அதேபோல் 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் கேப்டன்சிப்பிலிருந்து தோனி விலகியது முதல், இதுநாள் வரை சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி போன்ற ஒருவருக்கு பந்துவீச கற்றுக்கொள்ளுங்கள் - கோரி ஆண்டர்சன்!

ABOUT THE AUTHOR

...view details