இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று (மார்ச் 16) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன்பிறகு, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின் வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், "இந்தப் போட்டியின் முதல் பாதியில் எங்களது பௌலிங் சிறப்பாக இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சரியான லைன் & லெங்த்தில் பந்து வீசினர்.