இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சோமர்செட் - மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டவுன்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணியில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும், அந்த அணியின் கேப்டன் டாம் ஏபெல் சதம் விளாசி அசத்தினார். இதனால், சோமர்செட் அணி 20 ஓவர்களில் 226 ரன்களை குவித்தது.
23 பந்துகளில் 89 ரன்கள்... மரண மாஸ் காட்டிய இயான் மோர்கன் - Eoin Morgan runs against Somerset
டி20 பிளாஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனின் அதிரடியால் மிடில்செக்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து, 227 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணியில் கேப்டன் டேவிட் மலன் 14 பந்துகளில் 41 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை தந்தார். பின்னர் வந்த பால் ஸ்டிர்லிங் (25), டி வில்லியர்ஸ் (32), முஹமது ஹஃபிஸ் (18) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால், மிடில்செக்ஸ் அணி 10.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன் அதிரடியாக பேட்டிங் செய்தார். தொடர்ந்து பவுண்ட்ரி, சிக்சர்களாலும் ரசிகர்களுக்கு வான வேடிக்கையை காட்டியதால், மிடில்செக்ஸ் அணி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இயான் மோர்கன் 29 பந்துகளில் ஐந்து பவுண்ட்ரி, எட்டு சிக்சர் என 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், மிடில்செக்ஸ் அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.