இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் இன்றையப் போட்டியின் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம், இங்கிலாந்து அணி தரப்பில் 100ஆவது டி20 போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையையும் மோர்கன் பொற்றுள்ளார்.