பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக்(PSL) டி20 தொடரை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டுவரும் நிலையில், கடந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரின் எட்டு ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதை தவிர்த்துவந்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு இலங்கை அணி டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடியதையடுத்து, தற்போது இந்த சீசனிற்கான பிஎஸ்எல் தொடரின் அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தான் நாட்டில் நடத்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஷ்சன் மணி கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டை பாகிஸ்தானில் நடத்தியதன் மூலம் எங்கள் மீதான நம்பிக்கை அனைத்து நாட்டவருக்கும் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது பிஎஸ்எல் தொடரின் அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணில் நடத்துவதற்காக நான்கு மைதானங்களை தேர்வு செய்து அதனை தயார் படுத்தியும் வருகிறேம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சீசனில் பங்கேற்பதறக்காக 22 நாடுகளைச் சேர்ந்த 425 வீரர்கள் தங்களுடையை விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கென்யா, நமிபியா, கனடா மற்றும் நேபால் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் 32 ஆட்டங்களைக் கொண்ட பிஎஸ்எல் தொடர் முல்தான், பிண்டி, காடாஃபி, கராச்சி ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:”அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்” - பிசிசிஐ துணைத் தலைவர் பதிலடி.