தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சச்சின் சாதனையை முறியடித்து, சச்சினிடமே வாழ்த்து பெற்ற வீராங்கனை! - Shafali Verma closes the Sachin Records

மும்பை: 16 வயதேயாகும் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சச்சினை சந்தித்து வாழ்த்துப்பெற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

enjoy-the-game-and-always-give-your-best-sachin-tendulkar-to-shafali-verma
enjoy-the-game-and-always-give-your-best-sachin-tendulkar-to-shafali-verma

By

Published : Feb 13, 2020, 4:39 PM IST

ரசிகர்களாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர், வீராங்கனையாக இருந்தாலும் சிறுவயதில் அனைவருமே சச்சினைப் பார்த்துதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருப்போம். ஆனால் அந்த கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக களமிறங்கி சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டோம். ஆனால் சச்சின் தீவிர ரசிகையான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அந்த சாதனையைப் படைத்து, அவரிடமே வாழ்த்துப்பெற்ற சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

16 வயதாகும் இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா சர்வதேச போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக களமிறங்கி அசத்திவருகிறார். இவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்ததன் மூலம் மிகவும் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய வீராங்கனை என்ற சச்சினின் சர்வதேச சாதனையை உடைத்துள்ளார்.

ஷஃபாலி வர்மா ட்வீட்

இதனால் ஷஃபாலி வர்மா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்த வீராங்கனையாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணிகளின் பந்துவீச்சை துணிச்சலாக அடிக்கும் போக்கால், இந்திய மகளிர் கிரிக்கெட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர் சமீபத்தில் சச்சினைப் பார்த்து வாழ்த்துப்பெற்றுள்ளார். அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஷஃபாலி வர்மா, '' சச்சினால் மட்டுமே எனது கிரிக்கெட்டை வாழ்க்கையை தொடங்கினேன். எனது குடும்பமே சச்சினை கடவுளாக பார்க்கிறது. இன்று எனது வாழ்நாளில் மிகச்சிறந்த நாள். ஏனென்றால் எனது சிறுவயது ஹீரோவான சச்சினை சந்தித்துள்ளேன். அவரை சந்திக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பின்னூட்டமிட்டுள்ள சச்சின், ''எனது கடைசி ரஞ்சி டிராபி போட்டிக்காக நீங்கள் லாலியிலிருந்து பயணித்த கதையை அறிந்துகொண்டேன். அங்கிருந்து நீங்கள் இந்திய அணிக்காக ஆடுவது அற்புதமான விஷயம்.

எங்கள் கனவுகளை தொடர்ந்து துரத்துங்கள். ஏனென்றால் கனவுகள்தான் ஒருநாள் உண்மையாகும். ஒவ்வொரு போட்டியையும் ரசித்து ஆடுங்கள். அதற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.

இதையும் படிங்க:வெறித்தனம் காட்டிய ஷஃபாலி, ஸ்மிருதி மந்தனா...

ABOUT THE AUTHOR

...view details