தமிழ்நாடு

tamil nadu

ஒரே ஸ்பெல்லில் 66 ஓவர்கள்: கவுண்டி கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனை!

By

Published : Mar 5, 2020, 11:56 AM IST

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஸ்பெல்லில் 66 ஓவர்கள் வீசிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஐரேமோங்கரின் 145ஆவது பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது.

english-pacer-once-bowled-record-66-overs-in-just-1-spell
english-pacer-once-bowled-record-66-overs-in-just-1-spell

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியின்போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஒரு செஷனில் தொடர்ந்து பந்துவீசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் 1914ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கவுண்டி கிரிக்கெட் தொடரில் நாட்டிங்ஹாம்ஷயர் - ஹாம்ஷயர் அணியை எதிர்த்து ஆடியது. அந்தப் போட்டியில் நாட்டிங்ஹாம்ஷயர் அணி வீரர் ஜேம்ஸ் ஐரேமோங்கர் ஒரே ஸ்பெல்லில் 66 ஓவர்களைld தொடர்ந்து வீசியுள்ளார்.

ஒரு செஷன் முழுவதும் பந்துவீசினாலே ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் இந்தக் காலத்தில், ஒரே ஸ்பெல்லில் 66 ஓவர்கள் வீசுவதென்பது தற்கால கிரிக்கெட்டில் சாத்தியமில்லாத காரியம்.

அந்த ஆட்டத்தில் 66 ஓவர்கள் வீசிய ஜேம்ஸ் 81 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்று வரை கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இதுவே சாதனையாக இருக்கிறது.

1876ஆம் ஆண்டு பிறந்த ஜேம்ஸ் 334 முதல்தர போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் நரேந்திர ஹிர்வானி 1990ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் வீசிய 59 ஓவர்களே இதுவரை சாதனையாக உள்ளது.

அவரின் 145ஆவது பிறந்தநாள் இன்று நினைவுகூரப்பட்டுவரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஜேம்ஸ் ஒரே ஸ்பெல்லில் 66 ஓவர்கள் வீசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:500ஆவது டி20 போட்டி... 10,000 ஆயிரம் ரன்கள்... பொல்லார்டின் சாதனை

ABOUT THE AUTHOR

...view details