கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுவதாக இருந்தது. தற்போது நிலவி வரும் அசாதரண சூழல் காரணமாக இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து மற்றும் வால்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.