தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாவது டெஸ்ட்: ஆர்ச்சர் விலகல் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

England's Jofra Archer ruled out of 2nd Test against India in Chennai
England's Jofra Archer ruled out of 2nd Test against India in Chennai

By

Published : Feb 11, 2021, 10:29 PM IST

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.13) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இசிபி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக, அவரது வலது முழங்கையில் ஊசி போடப்பட்டுள்ளதால், சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது அபார பவுன்சர்களால் இந்திய அணி வீரர்களை திக்குமுக்காட செய்தார். அதிலும் ஆர்ச்சரின் ஒரே ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று முறை காயமடைந்த நிகழ்வும் அதில் அடங்கும்.

இதையும் படிங்க:பந்தின் தரத்தில் பிரச்னை: தரத்தை ஆராயுமாறு பிசிசிஐ கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details