தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடிதந்த ஹர்மன்ப்ரீத்! - Shafali verma

கான்பெர்ரா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

england-women-vs-india-women-india-women-won-by-5-wkts
england-women-vs-india-women-india-women-won-by-5-wkts

By

Published : Jan 31, 2020, 1:54 PM IST

மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் தொடங்கயிருப்பதால், அதற்கு தயாராகும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ஏமி எலன் ஒரு ரன்னிலும், டேலியல் 4 ரன்களிலும் ராஜேஸ்வரியின் பந்தில் பெவிலியன் அனுப்பப்பட்டனர். பின்னர் வந்த நடாலி - கேப்டன் க்நைட் இணை சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

நாடலி 20 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வில்சன் 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் இணைந்த க்நைட் - டாம்மி இணை இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தது. கேப்டன் க்நைட் அரைசதம் கடந்து அதிரடியாக ஆட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 120 ரன்களைக் கடந்தது.

தொடர்ந்து சிகா பாண்டேவின் பந்தில் க்நைட் 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டாம்மி 37 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக ராஜேஸ்வரி, சிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்மிருதி மந்தனா

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தது. ஸ்மிருதி மந்தனா 15 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஷஃபாலி - ஜெமிமா இணை சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 62 ரன்கள் எடுக்க, பின்னர் அதிரடி ஆட்டத்திற்கு மாறியது.

தொடர்ந்து ஷஃபாலி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 85 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இவருக்கு துணையாக ஆடிய வேதா 7 ரன்களிலும், பாட்டியா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்திருந்தது.

அதிரடியாக ஆடிய ஷஃபாலி

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீப்தி சர்மா - ஹர்மன் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன்னும், மூன்றாவது பந்தில் சிக்சரும் விளாசி இந்திய அணியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்கள் எடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: யு-19 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி.!

ABOUT THE AUTHOR

...view details