இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்லர் 38 ரன்களிலும், போப் 62 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டில் பிராட் 29 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக யாசிர் ஷா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஷான் மசூத், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் பாபர் அஸாம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.