தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இங்கிலாந்து தொடர் எங்களுக்கு ஆஷஸ் போன்றது' - கீமார் ரோச்! - இங்கிலாந்து - வேஸ்ட் இண்டிஸ்

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரானது, எங்களுக்கு ஆஷஸ் தொடர் போன்றது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் தெரிவித்துள்ளார்.

england-tour-like-the-ashes-for-us-says-wi-pacer-roach
england-tour-like-the-ashes-for-us-says-wi-pacer-roach

By

Published : Jul 6, 2020, 4:12 AM IST

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கீமார் ரோச், 'இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர். எனவே, எங்களைப் பொறுத்தவரையில் ஆஷஸ் தொடருக்கு நிகரானது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரோச், 'இத்தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அருகே எடுத்துச் செல்வதே எங்களின் முதல் குறிக்கோளாகும். அதேசமயம் நாங்கள் அவர்களின் மண்ணில் வெற்றி பெறுவதே எங்களுடைய லட்சியமாக வைத்துள்ளோம். மேலும் இத்தொடரானது எங்களுக்கு ஆஷஸ் தொடரைப் போன்றது. ஆகையால் இதனை வெல்ல அணி வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details