வருகிற நவம்பர் மாதம் இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தப்பட்டியளில் நட்சத்திர வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20க்கான அணியிலும், ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பிடிக்கவில்லை.
இவர்களுக்குப் பதிலாக டாம் பான்டன் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளனர். டொமினிக் சிபிலி இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜானி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக இடம்பிடித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பின் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.