தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் -  வேகபந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சதம் - 100 ashes wicket

பிர்மிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

broad

By

Published : Aug 2, 2019, 12:35 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பெருமை வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

அதுமட்டுமல்லாது கேப்டன் டிம் பெய்ன், ஜேம்ஸ் பாட்டின்சன், ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார். அவருடன் சேர்ந்து பிற இங்கிலாந்து பவுலர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

ஆனால் உறுதியுடன் தனி ஆளாக களத்தில் போராடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து தனது அணி 284 ரன்கள் எட்ட உதவினார். இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் இறுதியாக ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்தபோது, ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் சாதனைப்பட்டியலில் இணைந்தார். பிராட் இந்த சாதனையைப் படைக்கும் 19ஆவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் தசை பிடிப்பு காரணமாக வெளியேறிய ஆண்டர்சன் இதுவரை 104 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டூவர்ட் பிராட்

ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர்களின் பட்டியலில் முன்னாள் நட்சத்திர ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் நீடித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details