2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்ற மிக முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். உலகக்கோப்பைத் தொடரின்போது வீரர்களுக்கு கோப்பையுடன் சேர்த்து பதக்கமும் வழங்கப்படும். அந்தப் பதக்கத்தை வென்ற வீரர்கள் அனைவரும் அதனை பொக்கிஷமாக வைத்துப் பார்த்துகொள்வார்கள்.
ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீடு மாறியபோது உலகக்கோப்பை வென்ற பதக்கத்தை தவறவிட்டதாகக் கூறியிருந்தார்.