கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், காலி மைதானங்களில் தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
கிரிக்கெட் போட்டிகளுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டது. இதனை சரிசெய்ய சில கிரிக்கெட் வாரியங்கள், வீரர்களின் ஊதியத்தைக் குறைத்தன.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் (சிஇஓ) டாம் ஹாரிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் லட்சியங்களை சமரசம் செய்யாமல், செலவுகளை குறைப்பதற்கான வழிகளையும், கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தோம். அந்த ஆய்வினைத் தொடர்ந்து சில ஆலோசனைகளை மேற்கொண்டோம். அதன்மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொண்டால், செலவுகளை குறைக்க முடியும்.