2020ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் 16ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைப்பதற்கு வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் இரு அணிகளும் களமிறங்கியதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹேதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி நடாலியின் பொறுப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நடாலி 56 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 144 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாவது வீராங்கனையாகக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாரா டெய்லர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, காயம் காரணமாக ரிட்டையர்டு முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.