NZvENG: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம் கூறுகையில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியில் காஃப் இணைவார் என்றும், இவர் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட்டின் பழைய டீம் மெட்டும் ஆவார்’ எனத் தெரிவித்துள்ளது.