தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் பங்கேற்க முடியாது! - IPL in UAE

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த இரு அணி வீரர்களும் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது.

england-and-australias-ipl-bound-players-can-only-play-from-sep-26
england-and-australias-ipl-bound-players-can-only-play-from-sep-26

By

Published : Aug 17, 2020, 7:23 AM IST

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி முதல் நவ.10ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளனர்.

இதனிடையே ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி செப்.16ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தத் தொடர் உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தாலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால் 7 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதனால், முதல் ஒரு வாரத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க முடியாது என தெரிகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வீரர்கள் ஐபிஎல் தொடரின் 8 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் தரையிறங்கிய தல தோனி & கோ

ABOUT THE AUTHOR

...view details