இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செளதாம்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் 318 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 114 ரன்களுடன் முன்னிலை பெற்றது.
அதன்பின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி சிறப்பாக விளையாடி பணியின் ரன் கணக்கை உயர்த்தினார்கள்.
இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோரி பர்ன்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரேஷ்டன் சேஸிடம் விக்கெட்டை இழந்தார். பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சிப்லி அரை சதமடித்த கையோடு பெவிலியன் திரும்பினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை எடுத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ரன்களுடன் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாமல் எந்த பேட்மிண்டன் தொடரையும் நடத்தக் கூடாது - சாய் பிரனீத்