இதனால், அயர்லாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்ற 182 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக, ஜாக் லீக் 92, ஜேசன் ராய் 72 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அடைய்ர், ஸ்டூவர்ட் தாம்ப்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அயர்லாந்துக்கு 182 ரன்கள் இலக்கு - ஜாக் லீச்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற 182 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு 182 ரன்கள் இலக்கு
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது. பின்னர், 122 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி, 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, 1.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.