தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 2:28 AM IST

ETV Bharat / sports

பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் பாதிக்கப்படும் - டேரன் காஃப்!

பார்வையாளர்களின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேரன் காஃப் தெரிவித்துள்ளார்.

Ben Stokes
Ben Stokes

கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறாமல் இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 8ஆம் தேதி முதல் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது.

இதுவரை ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி வந்த வீரர்கள் தற்போது ரசிகர்களின்றி விளையாடவுள்ளனர். இந்த புதுவிதமான அனுபவம் அவர்களது ஆட்டத்திறனைப் பாதிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் பார்வையாளர்களின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேரன் காஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

"பெரிய தொடர்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவரைப் போன்ற சிறந்த வீரர்கள் தற்போது ரசிகர்கள் இல்லாமல் எவ்வாறு விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் ரசிகர்களின்றி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அது பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்திறனை பாதிக்கும் என நினைக்கிறேன். இது வீரர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என சொல்ல முடியாது.

குறிப்பாக சில வீரர்கள் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடும்போதுதான் சிறப்பாக விளையாடுவார்கள் என கிரேஹம் கூச் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ஒருசில வீரர்களுக்கு இது ஒரு பொருட்டே அல்ல.

ஏனெனில் மைதானத்தில் ரசிகர்கள் இருந்தாலும் சரி, ரசிகர்கள் இல்லையென்றாலும் சரி அவர்கள் தொடர்ந்து தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details