கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீடுகளிலேயே ஓய்வில் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகள் இல்லாத நிலையில், ரசிகர்களை உயிர்ப்புடன் வைக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் காணொலி மூலம் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.
யுவராஜ் சிங், பும்ரா, ஹர்பஜன், கைஃப், அஷ்வின், வார்னர் என நட்சத்திர விளையாட்டு வீரர்கள் பலரும் பழைய சம்பவங்களைப் பற்றி பேசுவது ரசிகர்களுக்கு சில நாஸ்டால்ஜியா நினைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், பங்கேற்ற நேர்காணலில் அவரிடம், 'ஊரடங்கு காலம் முடிந்தவுடன் யாருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ' ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி. அவருடன்தான் இரவு உணவு சாப்பிட ஆசைப்படுகிறேன்' என்றார்.