தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி விவரம்! - இயன் மோர்கன்

இங்கிலாந்து -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று(ஆக.31) அறிவிக்கப்பட்டுள்ளது.

ECB announces T20I, ODI squads for series against Australia
ECB announces T20I, ODI squads for series against Australia

By

Published : Aug 31, 2020, 8:55 PM IST

கரோனா தொற்று பாதிப்பால் நீண்ட நாள்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. ஏற்கனவே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து - அயர்லாந்து, இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏற்கெனவே இத்தொடருக்காக 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து அணி குறித்த விவரம்:

இங்கிலாந்து டி20 அணி: இயன் மோர்கன்(கே), மோயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டாம் கர்ரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன், அதில் ரஷீத், மார்க் வூட்.

இங்கிலாந்து ஒருநாள் அணி: இயன் மோர்கன்(கே), மோயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டாம் கர்ரன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

இதையும் படிங்க:கடந்த ஆண்டு கே.கே.ஆர் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என நினைத்தேன் - குல்தீப் யாதவ்!

ABOUT THE AUTHOR

...view details