தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘ஆட்டத்தின் நாயகன் நடராஜன்தான்’ - ஹர்திக் பாண்டியா - ஹர்திக் பாண்டியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில் இந்திய அணியின் ஹர்த்திக் பாண்டியா இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் நடராஜன் தான் என அவர் கூறியுள்ளார்.

During lockdown, I worked on how to finish games when it matters the most: Pandya
During lockdown, I worked on how to finish games when it matters the most: Pandya

By

Published : Dec 6, 2020, 9:56 PM IST

சிட்னியில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவின் சாம்ஸ் வீசிய மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஹர்த்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து போட்டி முடிவுக்கு பின் பேசிய பாண்டியா, “கரோனா ஊரடங்கின் போது ஆட்டத்தை எவ்வாறு ஃபினீஷ் செய்வதென்பதை கற்றுக்கொண்டேன். அது இன்று எனக்கு உதவியுள்ளது. ஏனெனில் இதற்கு முன்னதாக நான் இதுபோன்ற ஆட்டத்தை முடிக்கும் சூழ்நிலையில், அதனை தவறவிட்டுள்ளேன்.

தற்போது அத்தவறுகளை திருத்திக்கொண்டதன் விளைவாக நான் இன்றைய போட்டியில் சிறப்பான ஒரு ஃபினீஷிங்கைக் கொடுத்துள்ளேன்.

மேலும் இப்போட்டியின் நாயகன் நிச்சயம் நான் அல்ல. அது நடராஜன் தான். ஏனெனில் அவர் தனது ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தியதால் தான் நாங்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றோம்.

மேலும் நடராஜனைப் போல் ஒருவரை காண்பது அரிது. ஏனெனில் அவரை நீங்கள் யார்க்கர் வீசச்சொன்னால், யார்க்கர் வீசுவார்.

பந்தை லெந்த்தில் போட சொன்னால், லெந்த்தில் வீசுவார். அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசு. ஒரு வலை பந்துவீச்சாளராக இருந்த நடராஜன் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருமாறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘பயிற்சிபெற தடைவிதித்திருப்பது எங்கள் வீரர்களை பாதித்துள்ளது’ - மிஸ்பா உல் ஹக்

ABOUT THE AUTHOR

...view details