தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்களை அறிவித்த பிசிசிஐ - சுதன்ஷு கோடக்

டெல்லி: இந்திய 'ஏ' மற்றும் 'அண்டர் 19' அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளர்களாக சுதன்ஷு கோடக் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

India A

By

Published : Aug 29, 2019, 12:12 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாதால் அவரால் இனி இந்திய ஏ மற்றும் அண்டர் 19 அணிகளுக்கு பயிற்சியாளராக நீடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பராஸ் மாம்ப்ரே

இந்நிலையில் இந்திய 'ஏ' மற்றும் 'அண்டர் 19' அணிகளுக்கான பயிற்சியாளர்களுக்கான தேடல் தொடங்கிய நிலையில் முதல் தர போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய பராஸ் மாம்ப்ரே மற்றும் பேட்ஸ்மேனான சுதன்ஷு கோடக் ஆகியோரை புதிய பயிற்சியாளர்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்திருந்தது.

சுதன்ஷு கோடக்

பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுதன்ஷு கோடக் தனது முதல் தர போட்டிகளில் பேட்டிங்கில் 41.76 சராசரி மற்றும் 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றொரு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே 91 முதல் தர போட்டிகளில் 284 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details