இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாதமி இயக்குநர் டிராவிட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேல் தலைமை தாங்கியுள்ளார்.
ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கங்குலி, டிராவிட்! - ஐபிஎல் நிர்வாகக் குழு
டெல்லி: ஐபிஎல் தொடர் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடத்த டெல்லியில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூடியுள்ளது.
dravid-ganguly-attened-ipl-governing-body-meeting
இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு நேரத்தை மாற்றம் செய்தது குறித்து இறுதிசெய்யப்படவுள்ளது. டிராவிட் பங்கேற்றுள்ளதால், தேசிய கிரிக்கெட் அகாதமியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கத்தார் ஓபன் தொடரின் இறுதிப்போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்த சிமோனா