டிஎன்பிஎல் டி20 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
திண்டுகள் அணியில் ஜெகதீசன், சத்துர்வேத், மொஹமது ஆகியோரின் அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.
அதன்பிறகு 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி, திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் சரத் ராஜ் 32 ரன்களூம், ஜெகதீசன் கௌஷிக் 40 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்ட்மிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிரகன்ஸ் அணி வெற்றியடைந்தது.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திண்டுக்கல் அணி வீரர்கள் திண்டுக்கல் அணி சார்பில் ரோஹித், சிலம்பரசன் தலா 3விக்கெடுகளை வீழ்த்தினர். சிறப்பாக விளையாடிய ஹரி நிஷாந்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.