தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘அடுத்த தலைமுறையின் உத்வேகம் கலாம்’ - நினைவுகூரும் சச்சின் டெண்டுல்கர்! - Sachin Tendulkar

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Dr Kalam will remain an inspiration for generations to come: Sachin Tendulkar
Dr Kalam will remain an inspiration for generations to come: Sachin Tendulkar

By

Published : Oct 15, 2020, 8:57 PM IST

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், ஏவுகணை நாயகன் என அழைக்கபடுபவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரது 89ஆவது பிறந்த நாள் விழா இன்று (அக்.15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் அப்துல் கலாம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் அடுத்த தலைமுறையின் உத்வேகம் ஆவார். அவரது ஆரம்பக் காலங்களில் கடினமான சூழல் நிலவியபோதிலும், அதனைக் கடந்து பல்வேறு துறைகளில் உச்சத்தை அவர் எட்டியுள்ளார். ”பெரிதாகக் கனவு காணுங்கள், பணிவாக நடந்து கொள்ளுங்கள்” என்பதை அவர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவரின் புத்தகமான அக்னிச் சிறகுகள் பலரின் கனவுகளை உயரங்களுக்குக் கொண்டு செல்ல உதவி வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details