டி10 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்றுவருகிறது. இதில், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் விளையாடிவருகிறார். சமீபத்தில் கர்நாடக டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்த பொல்லார்ட் - Pollard slams 30 runs in one over video
டி10 கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லெமினாச்சேவின் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் 30 ரன்கள் அடித்துள்ளார்.
இதில், 111 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய டெக்கான் அணி, ஐந்து ஓவர்களின் முடிவில் 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. இந்த நிலையில், நேபாளத்தை சேர்ந்த சந்தீப் லெமினாச்சே வீசிய ஆறாவது ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட், அந்த ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்சர்களை பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து, ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும், ஆறாவது பந்தில் இரண்டு ரன்களும் என ஒரே ஓவரில் பொல்லார்ட் 30 ரன்களை சேர்த்தார்.
இதனால், டெக்கான் அணி 8.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. ஒரே ஓவரில் பொல்லார்ட் ஆடிய அதிரடி பேட்டிங் வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.