ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரேதசங்களாகப் பிரித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்தார்.
'கவலைப்படாதீங்க ஃப்ரெண்ட் எல்லாம் சரியாகிடும்'- அப்ரிடியை கலாய்த்த கம்பிர்! - கவுதம் கம்பிர்
ஜம்மு காஷ்மிர் விவகாரத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் பதிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி எம்பியுமான கவுதம் கம்பிர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், "ஐநாவின் தீர்மானித்தின்படி காஷ்மீர் மக்களுக்கான உரிமையை அவர்களிடம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐநா இன்னும் ஏன் உறங்கிக்கொண்டிக்கிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடக்கும் மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்கள் கவனிக்கபட வேண்டும். இதற்கு ஐநாவும், அமெரிக்காவும் விரைவில் நல்ல தீர்வு காண வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி எம்பியுமான கவுதம் கம்பிர், "அப்ரிடி சரியாகதான் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்டியதற்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட இந்த கொடூரமான தாக்குதல்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் நடைபெறுகிறது என்பதை சொல்ல மறந்துவிட்டீர்கள். கவலைப்படாதீர்கள் இந்தப் பிரச்னை கூடிய விரைவில் சரியாகிவிடும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.